/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ.5 லட்சம் ஆட்டைய போட்டுட்டார்: பா.ஜ., தலைவருக்கு எதிரான வீடியோ வைரல்
/
ரூ.5 லட்சம் ஆட்டைய போட்டுட்டார்: பா.ஜ., தலைவருக்கு எதிரான வீடியோ வைரல்
ரூ.5 லட்சம் ஆட்டைய போட்டுட்டார்: பா.ஜ., தலைவருக்கு எதிரான வீடியோ வைரல்
ரூ.5 லட்சம் ஆட்டைய போட்டுட்டார்: பா.ஜ., தலைவருக்கு எதிரான வீடியோ வைரல்
ADDED : மார் 25, 2024 05:42 AM
விருத்தாசலம்: பா.ஜ.க., கிழக்கு மாவட்ட தலைவருக்கு எதிராக மற்றொரு நிர்வாகி குமுறிய தகவல், சமூக வலைதளங்களில் வைரலாவதால் பரபரப்பு நிலவியது.
வட தமிழகத்தில் உள்ள கடலுார் மாவட்டத்தில், அண்ணாமலை மாநில தலைவராக பொறுப்பேற்ற பின்பு, தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ம.க., - வி.சி., கட்சிகளுக்கு நிகராக பா.ஜ.க., வளர்ச்சியடைந்து வருகிறது. கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் குக்கிராமங்களில் பா.ஜ., கொடி பறக்கிறது.
சமீபத்தில், என் மண் என் மக்கள் யாத்திரையின்போது, விருத்தாசலத்தில் திராவிட கட்சிகளுக்கு நிகராக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பு தரப்பட்டது. இந்நிலையில், கடலுார் கிழக்கு மாவட்டமான விருத்தாசலம், திட்டக்குடி உள்ளிட்ட ஐந்து சட்டசபை தொகுதிகளை ஒருங்கிணைக்கும் மாவட்ட தலைவருக்கு எதிராக புகைச்சல் கிளம்பியுள்ளது.
பா.ஜ., வாட்ஸ்ஆப் குழுவில் துவங்கிய புகைச்சல், மற்ற குழுக்களுக்கும் பரவி வருகிறது. அதில், விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த மணியான தலைவர் 5 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு போய் விட்டார். ஐந்து சட்டசபை தொகுதிகளில் கட்சி அலுவலகம் அமைக்க தரப்பட்ட பணம் என்ன ஆனது.
கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் அ.தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சர் கொடுத்த பணத்தை ஏமாற்றி, கொள்ளையடித்து விட்டாய். ஐந்து தொகுதிகளிலும் கட்சி அலுவலகம் அமைக்காவிட்டால், 5 லட்சம் ரூபாய் திருடியது குறித்து போஸ்டர் அடித்து ஒட்டுவோம் என பகிரப்பட்டு வருகிறது. அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து பா.ம.க., விலகிச் செல்ல பா.ஜ., காரணம் என்பதால், அ.தி.மு.க., அக்கட்சியினரும் இதனை அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.

