/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாரதியார் தின போட்டி புவனகிரி மாணவர்கள் சாதனை
/
பாரதியார் தின போட்டி புவனகிரி மாணவர்கள் சாதனை
ADDED : செப் 12, 2024 06:18 AM

புவனகிரி: பாரதியார் தின விளையாட்டு போட்டிகள் கடந்த மாதம் 1 ம் தேதி முதல் 23 ம் தேதி வரை நடந்தது.
இப்போட்டியில் புவனகிரி அருணாச்சலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் ஓட்டப்போட்டி, நீளம் தாண்டுதல், கோ.கோ மற்றும் கேரம் ஆகிய போட்டிகளில் இரண்டாமிடமும். தட்டெறிதல், ஈட்டி எறிதல் போட்டிகளில் மூன்றாமிடம், வலைக்கோல் பந்து போட்டியில் முதல் மற்றும் இரண்டாமிடம், டென்னிக்காய்டு மூன்று பிரிவுகளிலும் இரண்டாமிடம் என அனைத்து போட்டிகளில், 254 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு 119பேர் சான்றிதழ் பெற்றனர். சாதனை மாணவர்கள் மற்றும் பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பள்ளி தாளாளர் ரத்தினசுப்பிரமணியன், இயக்குநர் முத்துக்குமரன், கல்வி ஆலோசகர் செல்வராஜ், தலைமை ஆசிரியை கவிதா பாராட்டினர்.