/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புவனகிரி மாதிரி பள்ளி பிளஸ் 1 தேர்வில் சாதனை
/
புவனகிரி மாதிரி பள்ளி பிளஸ் 1 தேர்வில் சாதனை
ADDED : மே 15, 2024 11:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: புவனகிரி அரசு மாதிரி மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1, பொதுத் தேர்வில் 99 சதவீதம் தேர்ச்சி பெற்றது.
மாணவிகள் 211பேர் தேர்வு எழுதியதில், 209 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவிகள் மெகஸ்ரீ 540, ரெஹினா 534, அபிநயா 534, ஹரிதாதனம் 524, சிவசக்தி 524, ஆகியோர், பள்ளியில் முதல் ஐந்து இடங்களை பிடித்தனர்.
கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் ஒரு மாணவி 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளார். அதிக மதிப் பெண் பெற்ற மாணவிகளை, தலைமையாசிரியை சரவண ஜான்சிராணி, ஊழல் எதிர்ப்பு இயக்க தலைவர் வழக்கறிஞர் குணசேகரன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ரத்தினசுப்பிரமணியர் உள்ளிட்ட குழுவினர்கள் பாராட்டினர்.