ADDED : செப் 05, 2024 04:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் ஊராட்சியில் 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஊராட்சிமன்ற கட்டட பூமி பூஜையை ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன் துவக்கி வைத்தார்.
பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் ரூபாய் 28 லட்சம் செலவில் புதியதாக ஊராட்சி மன்ற கட்டிடம் பூமி பூஜை துவக்க விழா நேற்று நடந்தது. விழாவில் ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன் துவக்கி வைத்தார்.
இதில் அவை தலைவர் ராஜா, ஒன்றிய துணை சேர்மன் தேவகிஆடலரசு, ஒன்றிய துணை செயலாளர் செல்வகுமார், ஊராட்சிமன்ற தலைவர் பூவராகவன், துணை தலைவர் வெங்கடேசன், ஊராட்சி செயலர் விஜயகுமார்உள்ளிட்டோர் உடனிருந்தனர்.