/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பிச்சாவரம் மேம்பாட்டு பணிகள் சப் கலெக்டர் ஆய்வு
/
பிச்சாவரம் மேம்பாட்டு பணிகள் சப் கலெக்டர் ஆய்வு
ADDED : ஆக 18, 2024 05:47 AM

கிள்ளை, : பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் ரூ. 14.07 கோடியில் நடந்துவரும் மேம்பாட்டு பணிகளை பணிகளை சப் கலெக்டர் ரஷ்மிராணி ஆய்வு செய்தார்.
சிதம்பரம் அடுத்த பிச்சாவரத்தில் புகழ்பெற்ற வனச்சுற்றுலா மையம் உள்ளது. இங்கு சுரபுண்ணை எனும் மாங்குரோவ்ஸ் தாவரங்கள் மற்றும் மூலிகை தாவரங்கள் நிறைந்துள்ளதால் உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா வந்து படகு சவாரி செய்து மகிழ்ந்து செல்கின்றனர்.
இந்நிலையில், பிச்சாவரம் சுற்றுலா மையத்தை மேம்படுத்தும் பணிக்காக தமிழக அரசு ரூ. 14 கோடியே 7 லட்சம்நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடந்து வருகிறது. புதியதாக அமைய உள்ள சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதி, உணவகம், பறவைகள் பூங்கா இடங்களை நேற்று சப் கலெக்டர் ரஷ்மிராணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அவருடன், துணை சேர்மன் கிள்ளை ரவிந்திரன், மாவட்ட சுற்றுலா அலுவலர் கண்ணன், சுற்றுலா மைய மேலாளர்பைசல் அகமது உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

