/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நின்ற லாரி மீது பைக் மோதல்; சிறுமி பலி: 4 பேர் படுகாயம்
/
நின்ற லாரி மீது பைக் மோதல்; சிறுமி பலி: 4 பேர் படுகாயம்
நின்ற லாரி மீது பைக் மோதல்; சிறுமி பலி: 4 பேர் படுகாயம்
நின்ற லாரி மீது பைக் மோதல்; சிறுமி பலி: 4 பேர் படுகாயம்
ADDED : ஏப் 18, 2024 06:45 AM
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது பைக் மோதிய விபத்தில் சிறுமி இறந்தார். இரு குழந்தைகள் உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.
விக்கிரவாண்டி அடுத்த ஆசூர், மேட்டுத் தெருவை சேர்ந்தவர் கோவிந்தன்,45; சவுண்ட் சர்வீஸ் நடத்தி வருகிறார். இவர் நேற்று தனது மனைவி நிஷாந்தி, 38; மகள்கள் சங்கமித்ரா,5; சன்மதி, 3; மற்றும் சர்வேஸ்வரா என்ற 7 மாத ஆண் குழந்தையுடன் பண்ருட்டி அருகே உள்ள கோவிலுக்கு சென்றார். பின்னர் அனைவரும் பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டனர்.
பிற்பகல் 3:15 மணி அளவில் பைக் விக்கிரவாண்டி அடுத்த மண்டபம் பெட்ரோல் பங்க் அருகே வரும்போது சாலையோரம் நின்றிருந்த லாரி மீது பைக் மோதியது. அதில், பைக்கில் முன்னாள் அமர்ந்திருந்த சிறுமி சங்கமித்ரா தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.
படுகாயமடைந்த கோவிந்தன், நிஷாந்தி, சன்மதி மற்றும் குழந்தை சர்வேஸ்வரா ஆகியோரை அப்பகுதி மக்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

