ADDED : மே 08, 2024 12:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: புவனகிரி அருகே பைக் கில் சென்றவர், லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
புவனகிரி அருகே கீழமணக்குடி அடுத்த குறியாமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 39; டிரைவர்.
நேற்று காலை பைக்கில் புதுச்சத்திரம் நோக்கி சென்றார். தச்சக்காடு சாலையில் சென்றபோது, எதிரே ஜல்லி ஏற்றி வந்த லாரி மோதியது. இதில், மணிகண்டன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
புவனகிரி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து புவன கிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

