ADDED : செப் 17, 2024 06:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம், : சிதம்பரத்தில், கடையின் முன் நிறுத்தி வைத்திருந்த பைக்கை திருடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சிதம்பரம் செங்கட்டான் தெருவை சேர்ந்தவர் குமரவேல், 43; மேல வீதியில் உள்ள துணிக்கடையில் வேலை செய்து வருகிறார். நேற்று காலை, துணிக்கடை வாசலில் அவரது பைக்கை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றார்.
வேலை முடிந்து இரவு பைக்கை பார்த்தபோது காணவில்லை. குமரவேல் கடையின் முன்பு இருந்த கண்காணிப்பு கேமராவை பார்த்ததில், மர்ம நபர் பைக்கை திருடி சென்றது தெரிந்தது.
இதுகுறித்து சிதம்பரம் நகர போலீசில் குமரவேல் கொடுத்த புகாரில், போலீசார் வழக்கு பதிந்து பைக் திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.