புவனகிரி: புவனகிரியில் கடை முன்பு நிறுத்தியிருந்த பைக் திருடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
புவனகிரி அடுத்த குறியாமங்கலத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவர், நேற்று முன்தினம் தனக்கு சொந்தமான மோட்டார் பைக்கை, புவனகிரி கடைத்தெருவில் உள்ள கடை முன்பு நிறுத்திவிட்டு, பொருட்கள் வாங்கினார். சிறிது நேரத்தில் திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை.
இதுகுறித்து அவர் புவனகிரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இந்நிலையில் சிதம்பரம் போலீசார் வாகன சோதனையில் சந்தேகத்தின் பேரில் பைக்கில் வந்தவரை நிறுத்தி விசாரித்ததில் குறிஞ்சிப்பாடி அருகே குண்டியமல்லுார் பள்ளிக்கூடத்தெரு நாகராஜ், 23; என்பதும் புவனகிரியில் பைக் திருடியதும் தெரியவந்தது. அதையடுத்து, நாகராஜை புவனகிரிபோலீசார் கைது செய்து, அவரிடமிருந்து பைக்கை பறிமுதல் செய்தனர்.