/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தாசலம் நகர தி.மு.க., முதல்வர் பிறந்த நாள் விழா
/
விருத்தாசலம் நகர தி.மு.க., முதல்வர் பிறந்த நாள் விழா
விருத்தாசலம் நகர தி.மு.க., முதல்வர் பிறந்த நாள் விழா
விருத்தாசலம் நகர தி.மு.க., முதல்வர் பிறந்த நாள் விழா
ADDED : மார் 02, 2025 04:30 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் நகர தி.மு.க., சார்பில், முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
சேர்மன் சங்கவி முருகதாஸ் தலைமை தாங்கினார். அவைத் தலைவர் செங்குட்டுவன், பொதுக்குழு பாலகிருஷ்ணன், பொருளாளர் மணிகண்டன்முன்னிலை வகித்தனர். நகரதுணைசெயலாளர் நம்பிராஜன் வரவேற்றார். நிர்வாகிகள் அறிவுடை நம்பி, வெங்கடேசன், சீனிவாச காந்தி, வழக்கறிஞர் ரவிச்சந்திரன், சுந்தரமூர்த்தி, கவுன்சிலர்கள் அன்பழகன், அன்சர் அலி, முத்துக்குமரன், தீபா மாரிமுத்து, அருள்மணி செந்தில், இளைஞரணி தளபதி, தளபதி குமார், கார்த்திக், நிஷாந்த், அஜய், வட்டசெயலர்கள் கோவிந்தன், ராஜா, பரந்தாமன், தேவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக கடலுார் சாலையில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
நகர இளைஞரணி அமைப்பாளர் கணேஷ் நன்றி கூறினார்.