ADDED : ஆக 04, 2024 12:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடலுார்: வடலூரில், நகர பா.ஜ., சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.
பா.ஜ., சிறப்பு செற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி, பஸ் நிலையம் எதிரே நடந்த தெருமுனை பிரசார கூட்டத்திற்கு கடலுார் கிழக்கு மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணைத் தலைவர் அறிவழகன், மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகர தலைவர் திருமுருகன் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் பேசினார். மாவட்ட துணைத் தலைவர்கள் விஜயரங்கன், துரை ராமலிங்கம், மாநில நிர்வாகிகள் எழிலரசன், வேல்முருகன், ஓ.பி.சி. அணி மாநில செயலாளர் அரங்கநாதன், மகளிரணி செயலாளர் சுப ஸ்ரீ தவபாலன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
அருளரசன் நன்றி கூறினார்.