ADDED : ஜூலை 22, 2026 08:11 PM
அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார், சிப்காட் பேஸ் 1-ல் இயங்கி வரும் கிரிம்சன் ஆர்கானிக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில், சுற்றுச்சூழல் பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ் ரத்த தான முகாம் நடந்தது.தொழிற்சாலை மருத்துவ அலுவலர் ஷீலாதேவி தலைமை தாங்கினார். டாக்டர்கள் ஸ்ரீதர், அமிர்தாதேவி, ரங்கநாதன் முன்னிலை வகித்தனர்.
உதவி பொது மேலாளர் பொறியாளர் தாமரைச்செல்வன் வரவேற்றார். ஒப்பந்தத் தொழிலாளர்கள் உட்பட 60 ஊழியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். தொழிற்சாலையின் முயற்சியை பாராட்டி, டாக்டர்கள் நன்றி தெரிவித்தனர். டாக்டர் ராஜீவ் ரஞ்சன் ஜா மற்றும் இயக்கப் பிரிவு துணைத் தலைவர் பழனிவேல் கலந்து கொண்டனர்.
