ADDED : ஜூன் 15, 2024 06:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி: திட்டக்குடி அரசு மருத்துவமனையில், உலக ரத்த தான தினத்தையொட்டி விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
கடலுார் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகின் சார்பில், திட்டக்குடி அரசுமருத்துவமனையில் உலக ரத்த தான தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. திட்டக்குடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர்(பொ) சேபானந்தம் தலைமையில், டாக்டர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள் மற்றும் ஊழியர்கள், பிரதிபா பாரா மெடிக்கல் கல்லுாரி மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து மாணவர்கள், ரத்தப்பரிசோதனை செய்து கொண்டனர். நம்பிக்கை மைய ஆலோசகர் வெங்கடாஜலபதி, ஆய்வக நுட்புணர் குமார்,ஏஆர்டி செவிலியர் தபிதா ஞானம் உட்பட பலர் பங்கேற்றனர்.