/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காடாம்புலியூரில் பா.ம.க., செயற்குழு கூட்டம்
/
காடாம்புலியூரில் பா.ம.க., செயற்குழு கூட்டம்
ADDED : செப் 15, 2024 07:05 AM
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த காடாம்புலியூரில், பா.ம.க., நெய்வேலி சட்டசபை தொகுதி செயலாளர், தலைவர், மகளிரணி செயலாளர், தலைவர் புதிய பொறுப்பாளர்கள் நியமனத்திற்கான கலந்தாய்வு குறித்த மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.
வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சக்திவேல் வரவேற்றார்.
முன்னாள் மாவட்ட செயலாளர்கள் ஆறுமுகம், ரவிச்சந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வைத்தி, சேகர்,மாவட்ட வன்னியர் சங்க தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய நகர செயலாளர்கள் சக்திவேல், செல்வகுமார், செல்வகுமார், எழில்செல்வன் முன்னிலை வகித்தனர்.
மேலிட பார்வையாளர்களான மாநில அமைப்பு செயலாளர் தர்மபுரி சண்முகம், மாநில வன்னியர் சங்க செயலாளர் அய்யாசாமி, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில், என்.எல்.சி.,யில் 30 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் ஒப்பந்த தொழிலாளர் பிரச்னையில் மத்திய, மாநில அரசுகள் சமூக தீர்வு காண வேண்டும்.
என்.எல்.சி., நிறுவனத்திற்கு வீடு, நிலம் கொடுத்து பாதித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு, இழப்பீடு வழங்க வேண்டும்.
நெய்வேலி இந்திராநகர் ஊராட்சியில் நிலவி வரும் குடிநீர் பிரச்சனை, சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். வி.கே.டி.சாலையை துரிதமாக துவக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னாள் ஒன்றிய வன்னியர் சங்க தலைவர் ஞானவேல் நன்றி கூறினார்.