/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தியாகிகள் தினம் சிறப்பாக நடத்த பா.ம.க., தீர்மானம்
/
தியாகிகள் தினம் சிறப்பாக நடத்த பா.ம.க., தீர்மானம்
ADDED : ஆக 23, 2024 12:32 AM

கடலுார்: நெய்வேலி சட்டசபை தொகுதிக்கு, பா.ம.க., செயலாளர், தலைவர், மகளிரணி செயலாளர், தலைவர், புதிய பொறுப்பாளர்கள் நியமனத்திற்கான விண்ணப்ப படிவம் வழங்குவதற்கான பொதுக்குழு கூட்டம் நடந்தது.
நெய்வேலயில் நடந்த கூட்டத்திற்கு கடலுார் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் மணிவாசகம் வரவேற்றார்.
முன்னாள் மாவட்ட செயலாளர்கள் ஆறுமுகம், ரவிச்சந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் முத்து வைத்தி, சேகர், சக்ரவர்த்தி, மாநில மகளிரணி தலைவர் சுஜாதா கருணாகரன், மாவட்ட வன்னியர் சங்க தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.
மேலிட பார்வையாளர்களான மாநில அமைப்பு செயலாளர் தர்மபுரி சண்முகம், மாநில வன்னியர் சங்க செயலாளர் தங்க அய்யாசாமி, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர், பொறுப்பாளர்களுக்கு விண்ணப்ப படிவம் வழங்கி பேசினர்.
கூட்டத்தில், செப்., 17 கொள்ளுகாரன் குட்டையில் நடைபெற உள்ள தியாகிகள் தினத்தை சிறப்பாக நடத்துவது, தமிழக அரசு மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும். என்.எல்.சி., யில் 30 ஆண்டுகளாக பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்னையில் மத்திய, மாநில அரசு சமூக தீர்வு காண வேண்டும்.
என்.எல்.சி., நிறுவனத்திற்கு வீடு, நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட நெய்வேலி தொகுதிக்குட்பட்டவர்களுக்கு போர்க்கால அடிப்படையில் வேலைவாய்ப்பு, இழப்பீடும் வழங்க வேண்டும். சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை பணிகளை துரிதப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தமிழரசன் நன்றி கூறினார்.
பண்ருட்டி சட்டசபை தொகுதிக்கு கூட்டம் திருவதிகையில் நடந்தது. நகர செயலாளர் வேங்கடத்தான் ரவி வரவேற்றார். டாக்டர் கவுரிசங்கர், விநாயகமூர்த்தி, குணசேகர், பன்னீர்செல்வம், நிர்வாகிகள் அய்யப்பன், சதாசிவம் ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.