/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பழுதடைந்த மதகை சரிசெய்ய வலியுறுத்தி பொக்லைன் சிறைபிடிப்பு
/
பழுதடைந்த மதகை சரிசெய்ய வலியுறுத்தி பொக்லைன் சிறைபிடிப்பு
பழுதடைந்த மதகை சரிசெய்ய வலியுறுத்தி பொக்லைன் சிறைபிடிப்பு
பழுதடைந்த மதகை சரிசெய்ய வலியுறுத்தி பொக்லைன் சிறைபிடிப்பு
ADDED : மே 06, 2024 06:07 AM

புவனகிரி, : புவனகிரி அருகே உடைத்த மதகை சரி செய்து விட்டு வாய்க்காலை துார் வாரக்கோரி அப்பகுதியினர், பொக்லைனை சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புவனகிரி அடுத்த அழிச்சிக்குடி ஊராட்சிக்குட்பட்ட வண்டுராயம்பட்டில் விவசாயத்திற்கு தண்ணீர் தேங்கி பாசனம் செய்து வந்த மதகு உடைந்தது. இதனால் விவசாயத்திற்கு தண்ணீர் தேக்கி பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இவற்றை சரி செய்யக்கோரி விவசாயிகள் கோரிக்கை வைத்தும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை.
விவசாயிகள் அவ்வப்போது வாய்க்காலில் வைக்கோல் உள்ளிட்ட தடுப்பு அமைத்து தண்ணீர் தேக்கி வயலுக்கு பாய்ச்சி வந்தனர். மேலும் பூதவராயன்பேட்டை கிளை வாய்க்காலில் தண்ணீர் சென்றதால் தட்டுப்பாடு நிலவியது.
இதனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது அப்பகுதி விவசாயிகள் கடும் அதிர்ப்தியில் இருந்தனர். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் அப்பகுதி வாய்க்காலை துார் வார திட்டமிட்டு பொக்லையன் இயந்திரங்களை நிறுத்தி வைத்திருந்தனர். தகவலறிந்த அப்பகுதி விவசாயிகள் மதகை சீர் செய்யாமல் வாய்க்கால் துார்வார எதிர்ப்பு தெரிவித்து இயந்திரத்தை சிறை பிடித்தனர்.
தகவலறிந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ சம்பவ இடத்திற்கு சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி டெல்லா பாசன நிதியில் டெண்டர் விட்டு வாய்க்கால் துார்வாரப்படுகிறது. உடைந்த மதகு சரி செய்ய உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. தேர்தல் முடிவு வந்தப் பின் ஜூன் மாதம் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் அளித்தனர்.
அதற்கு விவசாயிகள், பழுதடைந்த மதகை உடைத்து அப்புறப்படுத்தி, மதகு கட்டி விட்டு பின் வாய்க்காலை துார் வாருங்கள் என பிடிவாதமாக இருந்ததால் வாய்க்கால் துார்வாராமல் அதிகாரிகள் திரும்பினர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.