/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முதுநகர் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு சோதனை
/
முதுநகர் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு சோதனை
ADDED : ஆக 13, 2024 11:00 PM

கடலுார்: கடலுார் முதுநகர் ரயில் நிலையத்தில் சுதந்திர தினம் பாதுகாப்பு கருதி ரயில்வே போலீசார் வெடிகுண்டு சோதனை நடத்தினர்.
சுதந்திர தின விழாவையொட்டி, அசம்பாவிதங்களை தடுக்க கடலுார் மாவட்டத்தில் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடலுார் முதுநகர் ரயில் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் எஸ்.ஐ.,ராஜகோபால் தலைமையில் ரஜினி பிரேம்நாத் உள்ளிட்ட போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
ரயில் பெட்டிகளில் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் மூலம் வெடிக்குண்டு சோதனை நடத்தப்பட்டது.
நேற்று மாலை ரயில் நிலையம் வந்த மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். ரயில் நிலைய வளாகத்தில் உள்ள டுவீலர் பார்க்கிங் இடம், ஆட்டோ ஸ்டாண்டு, பயணிகள் காத்திருப்பு அறை போன்ற இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இதேப்போன்று திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையத்திலும் சோதனை நடத்தப்பட்டது.