/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ.15 லட்சம் போர்வெல் பைப்புகள் எரிந்து நாசம்
/
ரூ.15 லட்சம் போர்வெல் பைப்புகள் எரிந்து நாசம்
ADDED : பிப் 27, 2025 06:24 AM

விருத்தாசலம்; விருத்தாசலத்தில் மர்மமான முறையில் தீப்பிடித்து, ரூ.15 லட்சம் மதிப்பிலான போர்வெல் பைப்புகள் எரிந்து நாசமாயின.
விருத்தாசலம், ஆலடி சாலையை சேர்ந்தவர் பத்மநாபன். இவர் விருத்தாசலம் பஸ் நிலையம் எதிரே போர்வெல் மோட்டார் கடை நடத்தி வருகிறார்.
ஆலடி சாலையில் உள்ள இவரது வீட்டின் காலி இடத்தில், ரூ.15 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் போர்வெல் பைப்புகளை விற்பனைக்காக அடுக்கி வைத்திருந்தார்.
நேற்று பகல், 2:30 மணியளவில் போர்வெல் பைப்புகள் அடுக்கி வைத்திருந்த இடத்தில் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது.
தகவலறிந்து வந்த விருத்தாசலம் தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கர், போக்குவரத்து துறை நிலைய அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
இதில், ரூ.15 லட்சம் மதிப்பிலான போர்வெல் பைப்புகள் முற்றிலும் எரிந்து நாசமாயின. இச்சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.