ADDED : ஏப் 09, 2024 05:29 AM
அ நிறம் | அளவு
குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி அருகே மதுபாட்டில் விற்ற வரை போலீசார் கைது செய்தனர்
குள்ளஞ்சாவடி போலீசார் நேற்று முன்தினம் சுப்ரமணியபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள வீடு ஒன்றின் பின்புறம் சட்ட விரோதமாக டாஸ்மாக் மதுபானங்களை மறைத்து வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மது விற்ற அதேபகுதியை சேர்ந்த ஆறுமுகம், 56; என்பவரை போலீசார் கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
