ADDED : ஆக 21, 2024 07:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம் : பெண்ணாடம் அருகே கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்றவரை கைது செய்து, தப்பியோடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் மற்றும் போலீசார் நேற்று காலை 7:00 மணியளவில் ரோந்து சென்றனர். அப்போது மாளிகைக்கோட்டம் டாஸ்மாக் அருகே கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில்களை பெண்ணாடம், வடக்கு ரத வீதி பாண்டியராஜன், 38, ஸ்டாலின் இருவரும் பதுக்கி வைத்து விற்றது தெரிந்தது.
இருவரையும் பிடிக்க முயன்றபோது, ஸ்டாலின் தப்பி சென்றார். பாண்டியராஜனிடம் இருந்த 34 மதுபாட்டில்கள், 3,500 ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். புகாரின்பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து பாண்டியராஜனை கைது செய்து, தப்பியோடிய ஸ்டாலினை தேடி வருகின்றனர்.