/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திரவுபதி அம்மன் கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்
/
திரவுபதி அம்மன் கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்
ADDED : மே 05, 2024 04:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம், : நெல்லிக்குப்பம் திரவுபதி அம்மன் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கொடியேற்றம் நடந்தது.
அதனையொட்டி நேற்று காலை கொடி மரத்துக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கொடி மரம் முன் எழுந்தருளச் செய்து, சிறப்பு தீபாராதனையும் அதனைத் தொடர்ந்து கொடியேற்றமும் நடந்தது.
தொடர்ந்து தினமும், இரவு அம்மன் வீதிஉலா நடக்கிறது. ஜூன் 7ம் தேதி மாலை தீமிதி திருவிழா நடக்கிறது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் சிவக்குமார் மற்றும் உற்சவதாரர்கள் செய்து வருகின்றனர்.