/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மூளைச்சாவு அடைந்த மூதாட்டி உடல் உறுப்புகள் தானம்
/
மூளைச்சாவு அடைந்த மூதாட்டி உடல் உறுப்புகள் தானம்
ADDED : ஆக 15, 2024 04:39 AM

நெல்லிக்குப்பம்: மூளைச்சாவு அடைந்த மூதாட்டியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
கடலுார் அடுத்த நெல்லிக்குப்பம் பள்ளமேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மனைவி ஜோதி,67; இவர், கடந்த 10ம் தேதி மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டது. உடன் அவரை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஜோதிக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாக கூறினர்.
அதனையொட்டி, அவரது கணவர் ராமகிருஷ்ணன், அவரது மகன்கள் ஜெகன்நாத், ஜெயபிரகாஷ் மகள் ஜெயஸ்ரீ ஆகியோர் மூளைச்சாவு அடைந்த ஜோதியின் உடல் உறுப்புகளை தானம் வழங்க முன்வந்தனர். அதனையொட்டி, ஜோதியின் உடல் உறுப்புகள் தானமாக பெறப் பட்டது.
உடல் உறுப்பு தானம் செய்த ஜோதியின் உடலுக்கு, அரசு சார்பில் டி.ஆர்.ஓ., ராஜசேகர், ஆர்.டி.ஓ.,அபிநயா, இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.