/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மூளைச்சாவு அடைந்த பெண் பரிதாப சாவு
/
மூளைச்சாவு அடைந்த பெண் பரிதாப சாவு
ADDED : மார் 02, 2025 06:37 AM

விருத்தாசலம்: முதல்வர் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு திரும்பியபோது ஏற்பட்ட விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த பெண் நேற்று உயிரிழந்தார்.
கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த திருப்பயர் கிராமத்தில், பள்ளி கல்வித்துறை சார்பில் கடந்த 22ம் தேதி நடந்த 'பெற்றோர்களை கொண்டாடுவோம்' நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்க வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு விருத்தாசலத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதில், மங்கலம்பேட்டை அடுத்த பழையபட்டிணம் கிராமத்தை சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் டாடா ஏஸ் வேனில் சென்ற பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு புறப்பட்டனர். கச்சிராயநத்தம் - இருசாளகுப்பம் சாலையில் சென்றபோது, நிலைதடுமாறிய டாடா ஏஸ் வேன், சாலையின் குறுக்கே கவிழ்ந்தது. இதில், டிரைவர் உட்பட 35 பேர் படுகாயமடைந்தனர்.
அதில், படுகாயமடைந்த குப்புசாமி, 55; விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், கடந்த 23ம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மலைராஜன் மனைவி வேம்பரசி,32, கடந்தவாரம் மூளைச்சாவு அடைந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
விபத்தில் ஏற்கனவே ஒருவர் பலியான நிலையில், மேலும் ஒரு பெண் பலியான சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.