ADDED : ஆக 04, 2024 11:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் ஆஞ்சநேயர் கோவில் கதவை உடைத்து 50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரத்தில் கடலுார் - பண்ருட்டி சாலையையொட்டி பக்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலின் பட்டாச்சார்யார் பார்த்தசாரதி நேற்று முன்தினம் இரவு கோவிலை வழக்கம் போல் பூட்டிவிட்டு சென்றார். நேற்று காலை வந்தபோது கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது 50 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி கிரீடம், சடாரி மற்றும் உண்டியல் பணம் திருட்டு போயிருந்தது. இது குறித்த புகாரின் பேரில், நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, கோவிலில் திருடிய நபர்களை தேடி வருகின்றனர்.