ADDED : ஆக 08, 2024 11:46 PM

புவனகிரி: புவனகிரி ரோட்டரி சங்கம் சார்பில் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது.
புவனகிரி தாலுகா அரசு மருத்துவமனை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மருத்துவ அலுவலர் டாக்டர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். ரோட்டரி சங்க மண்டல நிர்வாகி சுதர்சன் வரவேற்றார். அரசு மருத்துவமனை டாக்டர் அருள்மணி, ரோட்டரி சங்க மாவட்ட துணை ஆளுநர் ஆரோக்கியதாஸ், ரோட்டரி சங்க பொருளாளர் சரவணன், செயலாளர் ராமலிங்கம், முன்னாள் தலைவர் சேஷாத்திரி, திட்ட இயக்குனர் ராமமூர்த்தி, சங்க உறுப்பினர் விஜய் பிரபு முன்னிலை வகித்தனர்.
புவனகிரி ரோட்டரி சங்க தலைவர் டாக்டர் கதிரவன் பங்கேற்று தாய்ப்பால் அவசியம் குறித்து பெண்களுக்கு ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து 50 தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.
ரோட்டரி சங்க உறுப்பினர் கிருஷ்ணராஜ் நன்றி கூறினார்.