ADDED : ஆக 08, 2024 12:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேப்பூர் : வேப்பூர் சாய் அப்போலோ கல்வி நிறுவனங்களின் சார்பில் உலக தாய்ப்பால் வாரவிழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு, வேப்பூர் சாய் அப்போலோ கல்வி நிறுவனங்களின் தாளாளர் டாக்டர தங்கதுரை தலைமை தாங்கினார். கல்வி நிறுவனங்களின் டாக்டர் சுதாகர், சட்ட ஆலோசகர் நவீன், நிர்வாகி அம்பிகா தங்கதுரை முன்னிலை வகித்தனர். முதல்வர் பிரியங்கா வரவேற்றார்.
சுகாதார ஆய்வாளர் பூவராகவன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் ஆனந்த ஜோதி, சுஷ்மிதா, தேவிப்பிரியா, பேராசிரியர்கள், மாணவிகள் உட்பட பலர் பங்கேற்றனர். இதில், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதின் அவசியம், நன்மைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. தாய்ப்பாலின் மருத்துவ குணங்கள் தலைப்பில் பல்வேறு போட்டிகள் நடத்தி வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.