தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ திருமணத்திற்கு முன் மணப்பெண் மாயம்

திருமணத்திற்கு முன் மணப்பெண் மாயம்

திருமணத்திற்கு முன் மணப்பெண் மாயம்


ADDED : மே 14, 2026 05:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 14, 2026 05:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

 நெல்லிக்குப்பம்: திருமணத்திற்கு முன் மாயமான மணப்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

நெல்லிக்குப்பம் பள்ளத்தெருவை சேர்ந்த பிரகாஷ், வேளாங்கண்ணி தம்பதியினரின் மகன் நந்தகுமார்,22; அதே பகுதி, அண்ணா நகரை சேர்ந்த அசோக்குமார், தரணி தம்பதியினரின் மகள் கனிமொழி,20; இந்த இருவருக்கும்

திருமணம் செய்ய இரு குடும்பத்தினரும் முடிவு செய்தனர்.

 இவர்களின் திருமணம் நேற்று திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் காலை 8:00 மணிக்கு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இரு தரப்பினரும் கோவிலில் மணமக்களுடன் கூடியிருந்தனர். மணமக்கள் இருவரையும் மணமேடையில் உட்கார வைத்தனர்.

அப்போது கழிவறைக்கு செல்வதாக கூறி சென்ற மணப்பெண் கனிமொழி மீண்டும் திரும்பி வரவில்லை.

கோவில் முழுவதும் தேடியும் கனிமொழியை கண்டுபடிக்க முடியவில்லை. இதனால் திருமணம் நடைபெறவில்லை. இச்சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.

இது குறித்து பிரகாஷ் தனது மகன் திருமணத்தை நிறுத்திய கனிமொழி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். திருமணத்துக்கு செலவு செய்த தொகையை திருப்பி வாங்கி தர வேண்டும் என போலீசில் புகார் அளித்தார்.

நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us