தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பாலம் கட்டுமான பணி துவக்கம்  கடலுாரில் போக்குவரத்து மாற்றம்

பாலம் கட்டுமான பணி துவக்கம்  கடலுாரில் போக்குவரத்து மாற்றம்

பாலம் கட்டுமான பணி துவக்கம்  கடலுாரில் போக்குவரத்து மாற்றம்


ADDED : மே 15, 2026 05:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 15, 2026 05:41 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுாரில் பாலம் கட்டுமான பணி, துவங்கியுள்ளதால் வாகனங்கள் மாற்று  பாதையில் இயக்கப்படுகின்றன.

கடலுார், அண்ணா பாலம் அருகில், கெடிலம் ஆற்றின் குறுக்கே தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில், 22  கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய பாலம் கட்டப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக, பாரதி சாலையில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அருகில், நெடுஞ்சாலையின் இருபுறமும் குறுக்கே மழைநீர் செல்லும் வகையில் புதிதாக சிறிய பாலம் கட்டப்பட உள்ளது. இதற்கான கட்டுமான பணி நேற்று முன்தினம் இரவு துவங்கியது.

இதன் காரணமாக, கடலுார் பஸ்  நிலையத்தில் இருந்து புதுச்சேரி, சென்னை, விழுப்புரம் மார்க்கமாக செல்லும் பஸ் உள்ளிட்ட அனைத்து  வாகனங்களும் ஜவான்ஸ்பவன் புறவழிச்சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. 

சென்னை, புதுச்சேரி, விழுப்புரம் மார்க்கத்தில் இருந்து வாகனங்கள் வழக்கம் போல், பாரதிசாலை வழியாக  பஸ் நிலையம் செல்கிறது. 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us