/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஜெ.கே.ஆர்.டெக்ஸ் ஊழியர்களுக்கு பிரிட்ஜ்
/
ஜெ.கே.ஆர்.டெக்ஸ் ஊழியர்களுக்கு பிரிட்ஜ்
ADDED : ஆக 25, 2024 11:56 PM

பண்ருட்டி: பண்ருட்டி ஜெ.கே.ஆர்.டெக்ஸ் நிறுவன ஊழியர்கள் 80 நபர்களுக்கு இலவசமாக பிரிட்ஜ் வழங்கப்பட்டது.
பண்ருட்டி, கள்ளக்குறிச்சி, நெய்வேலி ஜெ.கே.ஆர்.டெக்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் 80 நபர்களுக்கு பணியை பாராட்டி 'பிரிட்ஜ்' பரிசாக வழங்கும் விழா நேற்று பண்ருட்டி ேஷாரூமில் நடந்தது.
விழாவிற்கு வந்திருந்தவர்களை ஜெ.கே.ஆர்.டெக்ஸ் உரிமையாளர் ரமேஷ்காந்தி- தீபலட்சுமி, கோகிலாகாந்தி ஆகியோர் வரவேற்றனர். கிளை மேலாளர்கள் அதுல், சீனுவாசன், அருண்குமார், பார்த்திபன், செல்வமணி முன்னிலை வகித்தனர்.
ஜெ.கே.ஆர்., எஸ்.பி.டெக்ஸ் நிறுவனர் ஜெயபால் தலைமை தாங்கி ஊழியர்களுக்கு இலவசமாக பிரிட்ஜ் வழங்கினார்.
கடலுார் எஸ்.பி.டெக்ஸ், ஸ்ரீபாலஜி பெரியவர் கடை உரிமையாளர் சுகுமார்காந்தி, கார்மெண்ட்ஸ் சுரேஷ், ரோட்டரி கிளப் ரவி, தியாகு ஜீவல்லரி கஜபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

