/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உடைந்த மின்கம்பம்: கிராம மக்கள் அச்சம்
/
உடைந்த மின்கம்பம்: கிராம மக்கள் அச்சம்
ADDED : மே 24, 2024 05:38 AM
கடலுார்: கடலுார் அருகே தோட்டப்பட்டு கிராமத்தில் செரித்து உடைந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பத்தால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கடலுார் அருகே தோட்டப்பட்டு கிராமத்தில் விநாயகர் கோவில் தெருவில் இரும்பு மின்கம்பம் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்புபோடப்பட்ட மின் கம்பம் என்பதால் தரைப்பகுதியில் துருப்பிடித்து செரித்துபோயுள்ளது. இதனால் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் விழும் நிலை உள்ளது. இதன் அருகே அரசு துவக்கப்பள்ளி உள்ளதால், மாணவ மாணவியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது. மேலும், கிராம பகுதியினர் சிலர் ஆடு, மாடுகளை இதில் கட்டி வருகின்றனர்.
இதனால் அருகில் வசிப்போர்கள் அச்சத்துடன் இருந்து வருகின்றனர். மின் கம்பத்தை மாற்றுமாறு மின்வாரிய ஊழியர்களிடம் பல முறை கூறியும் கண்டு கொள்ளவில்லை. எனவே அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.