/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை சிதம்பரம் அருகே துணிகரம்
/
வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை சிதம்பரம் அருகே துணிகரம்
வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை சிதம்பரம் அருகே துணிகரம்
வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை சிதம்பரம் அருகே துணிகரம்
ADDED : ஆக 21, 2024 07:38 AM
சிதம்பரம் : சிதம்பரம் அருகே பூட்டிய வீட்டை உடைத்து தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சிதம்பரம் சி. தண்டீஸ்வரநல்லூர், சிவஜோதி நகரை சேர்ந்தவர் வேல்முருகன்,47; இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டி விட்டு தனது தங்கை வீட்டுக்கு சென்றுள்ளார். மறுநாள் காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க இரும்பு கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த மூன்று சவரன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து சிதம்பரம் தாலுகா போலீசில் வேல்முருகன் கொடுத்த புகாரில், போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.கொள்ளை போன நகைகளின் மதிப்பு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஆகும்.