காட்சிப்பொருளான கேமராக்கள் குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்பு
காட்சிப்பொருளான கேமராக்கள் குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்பு
ADDED : மே 07, 2026 11:22 PM
மந்தாரக்குப்பம்: கண்காணிப்பு கேமராக்கள் காட்சி பொருளாக மாறியுள்ளதால் குற்ற சம்பவங்கள் அதிகரிக்க வழி வகை ஏற்பட்டுள்ளது.
மந்தாரக்குப்பம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு பொதுமக்கள், வியாபாரிகள், அரிமா சங்கம், தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் ஒத்துழைப்புடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, போலீசாரின் முயற்சியால் கடைவீதி நான்குரோடு, ஸ்டேட்பாங்க் பஸ் நிறுத்தம், பெரியாக்குறிச்சி உள்ளிட்ட பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.
இதனால் பெண்களிடம் நகை பறிப்பு, கடைகளில் திருட்டு சம்பவம், இருசக்கர வாகனங்கள் திருட்டு உள்ளிட்டவைகள் குறித்து போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவின் மூலம் கொள்ளையர்களை விரைவில் கண்டறிந்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கண்காணிப்பு கேமரா பராமரிப்பு இன்றி பழுதாகி இருப்பதால் காட்சி பொருளாக மாறி உள்ளது.
அதனால், அனைத்து கேமராக்களையும் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
