ADDED : செப் 18, 2024 06:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் சரகத்தில் உள்ள ஒரு போலீஸ் ஸ்டேஷன் எல்லையில் உள்ள கிராமத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் இருதரப்பினர் இடப்பிரச்னை சம்பந்தமாக தாக்கிக் கொண்டனர். புகாரில், இரு தரப்பையும் சேர்ந்த 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
அதில், கல்லுாரி மாணவர்கள் இருவர் பெயரை நீக்க, இரு தரப்பினரும் எஸ்.ஐ., யை அணுகினர். ஒரு வழியாக இறங்கிவந்த எஸ்.ஐ., இருவரிடமும் பேரம் பேசி, குறிப்பிட்ட தொகை பெற்றுள் ளார். அதன்பிறகே, இரு மாணவர்களும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.