ADDED : ஆக 16, 2024 11:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: நிலத்தகராறில் தாக்கிக் கொண்ட அண்ணன், தம்பி உட்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மங்கலம்பேட்டை அடுத்த கோ.பூவனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாராம், 64, இவரது அண்ணன் ராதாகிருஷ்ணன். இருவருக்குமிடையே நிலம் தொடர்பாக முன்ேவிரோதம் இருந்து வந்தது. கடந்த 12ம் தேதி இவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில், இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.
இருதரப்பு புகாரின் பேரில், கோவிந்தசாமி, ரங்கநாயகி, ராதாகிருஷ்ணன், பூமாலை, ராஜாராம், செல்வம், பாலு ஆகிய 7 பேர் மீது மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.