/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண்ணுக்கு மிரட்டல் தந்தை, மகன் மீது வழக்கு
/
பெண்ணுக்கு மிரட்டல் தந்தை, மகன் மீது வழக்கு
ADDED : ஜூன் 18, 2024 05:31 AM
புவனகிரி: புவனகிரியில் வாடகைக்கு குடியிருந்த பெண்ணை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது மகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
புவனகிரியை சேர்ந்தவர் கனகராஜ். பஸ் நிலையம் எதிரில் உள்ள இவரது வீட்டில் மேலமூங்கிலடியைச் சேர்ந்த மலர்மன்னன் என்பவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். வீட்டை காலி செய்வது தொடர்பாக, கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.
இந்நிலையில், மலர்மன்னன் வெளியூர் சென்றிருந்தார். அவரது மனைவி அமுதா மற்றும் இரு பிள்ளைகளுடன் வீட்டில் இருந்தனர். நேற்று முன்தினம் அவரது வீட்டிற்கு கனகராஜ் மற்றும் அவரது மகன் வினோத்குமார் சென்று, அங்கிருந்த பொருட்களை ரோட்டில் வைத்து பிரச்னை செய்ததுடன், மூவரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.