/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
/
பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
ADDED : ஏப் 28, 2024 03:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு : சி.என்.பாளையத்தில் வீட்டுமனை பிரச்னை காரணமாக பெண்ணை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
சி.என்.பாளையம் சொக்கநாதன்பேட்டையை சேர்ந்தவர் வெங்கடாசலம் மனைவி செல்வி,46. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மணிவாசகம், திருமூர்த்திக்கும் இடையே வீட்டு மனை பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
செல்வியை மணிவாசகம், திருமூர்த்தி, அவரது தாய் ஜெகமயில் ஆகிய மூவரும் சேர்ந்து ஆபாசமாக திட்டி தாக்கினர். படு காயமடைந்த செல்வி கடலுார் அரசுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்த புகாரின் பேரில், மணிவாசகம் உட்பட மூவர் மீது நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

