ADDED : ஜூலை 02, 2024 05:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி: அரசு பொதுத்தேர்வில் தமிழில் அதிக மதிப்பெண் பெற்ற குள்ளஞ்சாவடி அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வித்துறை சார்பில் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
அரசு மற்றும், அரசு உதவி பெறும் பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 தேர்வில் தமிழில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, தமிழக அரசு சார்பில் காமராஜர் விருது அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டது. அந்த வகையில் தமிழில் அதிக மதிப்பெண் பெற்ற குள்ளஞ்சாவடி அரசு மேல்நிலை பள்ளி மாணவர்களான ஜெயஸ்ரீ, யுவராணி ஆகியோருக்கு தலா, 20 ஆயிரம் ரூபாயும், நவீன்குமார் என்ற மாணவருக்கு, 10 ஆயிரம் ரூபாயும் கடலூர் மாவட்ட கல்வித்துறை சார்பில் வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் கொளஞ்சியப்பன் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.