/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முந்திரி உற்பத்தி, ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகள் கலெக்டரிடம் கோரிக்கை மனு

ADDED : ஆக 03, 2024 04:20 AM

பண்ருட்டி : தமிழ்நாடு முந்திரி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகள் கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர்.
சங்கத் தலைவர் மலர்வாசகம், செயலாளர் ராமகிருஷ்ணன், பொருளாளர் செல்வமணி, உறுப்பினர் மணிகண்டன் ஆகியோர் கடலுார் கலெக்டர் சிபிஆதித்யா செந்தில்குமார் சந்தித்து அளித்த மனு:
முந்திரி நிறுவனங்கள் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 24 மணிநேர தடையில்லா மும்முனை மின்சாரம் தொடர்ந்து வழங்கவேண்டும். பண்ருட்டி பகுதியில் முந்திரி உற்பத்தி நிறுவனங்களுக்கு தேவையான மூலப்பொருட்களான முந்திரி கொட்டைகள் போதுமானதாக இல்லை. அயல் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய சூழல் உள்ளது.
எனவே அரசு தோட்டக்கலைத் துறையின் சார்பாக கிராமங்களில் உள்ள அரசு நிலங்களில் முந்திரி தோட்டங்களை உருவாக்குதல், புதிய மரங்களை விளைவிக்க விவசாயிகளை ஊக்குவித்தல், விவசாயிகளுக்கு தேவையான கடன் வசதி அளிக்கவேண்டும்.
முந்திரி விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையான முந்திரி பழச்சாறு தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை பண்ருட்டி சுற்றியுள்ள பகுதியில் அரசு அமைத்திட வேண்டும். முந்திரி பணியாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து புதிய திறன் பணியாளர்கள் உருவாக்க அரசு உதவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.