/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் செடல் விழா
/
ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் செடல் விழா
ADDED : ஜூலை 25, 2024 11:42 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் முதுநகர் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில், ஆடி மாத செடல் பிரமோற்சவ விழா நேற்று துவங்கியது.
கோவிலில் நேற்று காலை  கொடியேற்றம் நடந்தது. அதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,  தீபாரதனை நடந்தது. இரவு அம்மனுக்கு சிவலிங்க பூஜை செய்யப்பட்டு, வீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதியுலா நடக்கிறது.
முக்கிய நிகழ்ச்சியான செடல் உற்சவம் வரும் ஆக., 2ம் தேதி நடக்கிறது.

