தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு  

மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு  

மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு  


ADDED : ஜூலை 31, 2026 11:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 31, 2026 11:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மந்தாரக்குப்பம்: இணையதளம் மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு சுய விவரங்களை பதிவேற்றம்  செய்ய வலியுறுத்தி கெங்கைகொண்டான் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

வரும், 2027 ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஏராளமான கள பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுமக்களின் அடிப்படை வசதிகளான கல்வி, வீடு, சாலை வசதி, உள்ளிட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து இந்த கணக்கெடுப்பு பணிகள் உதவுகின்றன.

கெங்கைகொண்டான் பேரூராட்சி சார்பில்  பொதுமக்களின் சுயவிவரங்களை இணையதளத்தில்  https://se.census.gov.in மொபைல்போன் மூலம் பதிவு செய்யவும், தனியார், அரசு அலுவலகம், கடைகள்,மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் கணக்கெடுப்பிற்கு பொதுமக்கள் ஒத்துழைக்கவும்  வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதனல் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.  

மேலும் இணையதளத்தில் சுய விவரங்கள் பதிவு செய்தவுடன் 11 இலக்க கணக்கெடுப்பு குறிப்பு எண் வழங்கப்படுகிறது.

இந்த எண்ணை  கணக்கெடுப்பாளர் நேரில்  உங்கள் வீட்டிற்கு வரும் போது குறிப்பு எண்ணை  சரிபார்த்து உறுதி செய்யும் பணியில் அலுவலர்கள் ஈடுப்படுவார்கள் என கெங்கைகொண்டான் பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரி தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us