ADDED : ஜூலை 08, 2026 08:12 PM
வடலுார்: வடலுாரில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான பயிற்சி வகுப்பு நடந்தது.
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் ஆகஸ்டில் நடக்க உள்ளது. இந்நிலையில், மேற்பார்வையாளர்கள் மற்றும், கணக்கெடுப்பாளர்களுக்கான, 3 நாட்கள் பயிற்சி வகுப்பு, வடலுார் நகராட்சி கூட்டரங்கில் நடந்தது.
நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரு வீடும் விடுபடாமல் வீடு, வீடாக சென்று, மக்கள் தொகை கணக்கெடுப்பினை டிஜிட்டல் முறையில் மொபைல் ‘ஆப்’ மூலம் பதிவேற்றம் செய்ய பயிற்சி அளிக்கப்பட்டது. முதல் கட்டமாக நடந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு, நகராட்சி கமிஷனர் ஹேமலதா கணக்கெடுப்பு பணி குறித்த ஆலோசனைகள் வழங்கினார்.
இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு, 13ம் தேதி தொடங்கி, 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பொதுமக்கள் மொபைல் ஆப் மூலம் கணக்கெடுப்பு தொடர்பான சுய பதிவேற்றமானது, வரும், 17 ம் தேதி துவங்கி, 31ம் தேதி நிறைவு பெறுகிறது.
வீடு வீடாக நடைபெறும் கணக்கெடுப்பு பணி வரும் ஆக., முதல் தேதி துவங்கி, 31ம் தேதி வரை நடக்கிறது. நிகழ்வில் மேலாளர் துரை, கணேசமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
