/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வடலுார் சத்திய ஞான சபையில் மத்திய தொல்லியல் துறை ஆய்வு
/
வடலுார் சத்திய ஞான சபையில் மத்திய தொல்லியல் துறை ஆய்வு
வடலுார் சத்திய ஞான சபையில் மத்திய தொல்லியல் துறை ஆய்வு
வடலுார் சத்திய ஞான சபையில் மத்திய தொல்லியல் துறை ஆய்வு
ADDED : ஆக 31, 2024 02:13 AM

வடலுார்: வடலுார் வள்ளலார் சத்திய ஞான சபையில் மத்திய தொல்லியல் துறையினர் நேற்று ஆய்வு செய்தனர்.
கடலுார் மாவட்டம், வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை செயல்பட்டு வருகிறது.
இந்த சத்திய ஞான சபை பெருவெளியில் ரூ.100 கோடி மதிப்பில் வள்ளலார் சர்வதேச ஆய்வு மையம் அமைக்க தமிழக அரசு அடிக்கல் நாட்டியது.
இதற்கு பல்வேறு தரப்பினம் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சத்திய ஞான சபை பெருவெளியில் சர்வதேச மையம் அமைக்கக் கூடாது.
இப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும் பா.ஜ., மாநில நிர்வாகி கடலுார் வினோத் ராகவேந்திரன், விழுப்புரம் தமிழ் வேங்கை ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த பகுதியை மாநில தொல்லியல் துறையினர் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆய்வு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், மத்திய தொல்லியல் துறையினர், சென்னை மண்டல அலுவலர்கள் வெற்றிச்செல்வி மற்றும் ரமேஷ் ஆகியோர் நேற்று வடலுாரில் சத்திய ஞான சபை மற்றும் சர்வதேச மையம் அமைய உள்ள பகுதிகளில் ஆய்வு செய்தனர்.