/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மத்திய தொழிற்சங்கத்தினர் கடலுாரில் ஆர்ப்பாட்டம்
/
மத்திய தொழிற்சங்கத்தினர் கடலுாரில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 25, 2024 06:20 AM

கடலுார்: கடலுார் தலைமை தபால் நிலையம் அருகில், அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தொ.மு.ச., மாவட்ட கவுன்சில் செயலாளர் பொன்முடி தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சில் பொருளாளர் வேல்முருகன், ஏ.ஐ.டி.யூ.சி., மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், ஐ.என்.டி.யூ.சி., மாவட்ட கவுன்சில் பொருளாளர் ஆனந்தன், மின்வாரிய எச்.எம்.எஸ்., வட்ட பொருளாளர் அருள்செல்வன் முன்னிலை வகித்தனர்.
என்.எல்.சி., தொ.மு.ச., பொதுச் செயலாளர் பாரி, சி.ஐ.டி.யூ., மாநில துணைத் தலைவர் கருப்பையன், ஏ.ஐ.டி.யூ.சி., மாவட்ட பொதுச் செயலாளர் குணசேகரன் கண்டன உரையாற்றினர்.
இதில், மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகள் நான்கையும் உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
விவசாயிகளின் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது, நிர்வாகிகள் மனோகரன், சரவணன், தங்க ஆனந்தன், பழனிவேல், குளோப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சி.ஐ.டி.யூ., மாவட்ட பொருளாளர் சீனுவாசன் நன்றி கூறினார்.