கோடை கால கிரிக்கெட் பயிற்சி மாணவர்களுக்கு சான்றிதழ்
கோடை கால கிரிக்கெட் பயிற்சி மாணவர்களுக்கு சான்றிதழ்
ADDED : மே 22, 2024 01:00 AM

கடலுார் : கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் கோடை கால கிரிக்கெட் பயிற்சி முகாம் நிறைவு விழா நடந்தது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் கடலுார் மாவட்ட கிரிக்கெட் சங்கம் ஆகியன சார்பில் கோடை கால கிரிக்கெட் பயிற்சி முகாம் 21 நாட்கள் கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் நடந்தது. முகாமில், 120 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்க பயிற்சியாளர் ராகுல் பயிற்சி அளித்தார்.
நேற்று நடந்த முகாம் நிறைவு விழாவில் கடலுார் மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் மாவட்ட விளையாட்டு அதிகாரி மகேஷ்குமார், முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். ஏற்பாடுகளை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் கூத்தரசன் செய்திருந்தார். விழாவில், ஞானம், பாபு, மகேந்திரன், கலை, ரமேஷ் பங்கேற்றனர்.
