ADDED : ஜூன் 29, 2024 06:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம் : சிதம்பரம், தேரடி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தம்பிபிள்ளை மனைவி ரம்யாதேவி,42; அரசு பள்ளி ஆசிரியர்.
இவர், நேற்று மாலை சாலியன்தோப்பு பஸ் நிறுத்தம் அருகே நின்றிந்த போது, பைக்கில் வந்த இருவர், ரம்யாதேவி அணிந்திருந்த 9 சவரன் தாலிச் செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். அண்ணாமலை நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.