/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நடுவீரப்பட்டு கோவிலில் சண்டி ஹோமம்
/
நடுவீரப்பட்டு கோவிலில் சண்டி ஹோமம்
ADDED : ஆக 13, 2024 10:56 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு பாதாளகாளி மற்றும் பிரத்தியங்கராதேவி கோவிலில் உலக நன்மை வேண்டி மகா சண்டிஹோமம் நடந்தது.
கோவிலில் கடந்த 12 ம் தேதி பூஜைகள் துவங்கியது. நேற்று காலை 8:00 மணிக்கு கோ பூஜை, 13 அத்யாய மகா சண்டி ஹோமம், சுமங்கலி சுவசாஹினி பூஜை நடந்தது. மதியம் 1:00 மணிக்கு மகா சண்டி ேஹாமத்தில் வைக்கப்பட்ட கலசங்கள் ஆலய உலாவாக வந்து சுவாமிக்கு மகா அபிஷேகம் நடந்தது.
ஏராளமான பக்தர்கள் பாதாளகாளி மற்றும் பிரத்தியங்கராதேவியை வழிபட்டனர்.
ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி அறிவழகன் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் செய்திருந்தனர்.