/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வெள்ளி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரர் சுவாமி உலா
/
வெள்ளி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரர் சுவாமி உலா
ADDED : பிப் 27, 2025 06:52 AM

விருத்தாசலம்; விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஆழத்து விநாயகருக்கு கடந்த 21ம் தேதி கொடியேற்றம் நடந்தது.
தினசரி சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்து வருகிறது. முக்கிய நிகழ்வாக நேற்று ஆறாம் நாளையொட்டி, ஆழத்து விநாயகர், சுவாமி, அம்பாள், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
பகல் 11:00 மணிக்கு மேல், விருத்தகிரீஸ்வரர் சுவாமி சந்திரசேகரர் சுவாமி அலங்காரத்தில் வெள்ளி ரிஷப வாகனத்திலும், ஆழத்து விநாயகர் மூஷிக வாகனத்திலும் வீதியுலா வந்து அருள்பாலித்தனர். ஏராளமானோர் தரிசனம் செய்தனர். நாளை மறுநாள் காலை 5:00 மணிக்கு மேல், ஆழத்து விநாயகர் தேரோட்டம் நடக்கிறது. மறுநாள் பகல் 1:00 மணிக்கு தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது.