/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் மஞ்சக்கொல்லை பள்ளிக்கு மாற்றம்
/
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் மஞ்சக்கொல்லை பள்ளிக்கு மாற்றம்
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் மஞ்சக்கொல்லை பள்ளிக்கு மாற்றம்
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் மஞ்சக்கொல்லை பள்ளிக்கு மாற்றம்
ADDED : ஆக 05, 2024 04:48 AM
சேத்தியாத்தோப்பு,: சேத்தியாத்தோப்பு அருகே பின்னலுார் உயர்நிலைப் பள்ளியில் 7ம் தேதி நடைபெறும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம், போதிய இடவசதி பற்றாக்குறையால் மஞ்சக்கொல்லை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பின்னலுார் அரசு உயர்நிலைப்பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடத்துவதற்கு வருவாய்த்துறை மற்றும் ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்ததில், இடம் பற்றாக்குறை உள்ளதையறிந்து இடம் மாற்றம் செய்துள்ளனர்.
தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ள மஞ்சக்கொல்லை அரசுமேல்நிலைப் பள்ளியில் வரும் 7ம் தேதி நடைபெறும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் மேல்புவனகிரி ஒன்றியத்திற்குட்பட்ட பின்னலுார், கரைமேடு, அம்பாள்புரம், மிராளூர், உளுத்துார், பிரசன்னராமாபுரம், வடதலைக் குளம் கிராம ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து நேரில் மனு அளிக்கலாம். வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்துறை அதிகாரிகளும் முகாமில் பங்கேற்று மனுக்களை பெற உள்ளனர்.