/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
செங்கழனி மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா
/
செங்கழனி மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா
ADDED : ஏப் 28, 2024 04:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் செங்கழனி மாரியம்மன் கோவிலில் பிரம்மோற்சவ தேர்த் திருவிழா நடந்தது.
கடலுார், உண்ணாமலை செட்டிச்சாவடி செடல் செங்கழனி மாரியம்மன் கோவிலில் 48ம் ஆண்டு பிரம்மோற்சவ தேர்த் திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு பூஜை, வீதியுலா நடந்தது.
நேற்று முன்தினம் அக்னி சட்டி வீதியுலா, காவடி பூஜை, கழுமரம் ஏறுதல், தேர்த் திருவிழா, செடல் மற்றும் அலகு குத்தியும், பறவை அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

