ADDED : மே 03, 2024 11:56 PM

மந்தாரக்குப்பம் : தெற்குவெள்ளுர் அழகு நாச்சியம்மன் கோவிலில் சித்திரை தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மந்தாரக்குப்பம் அடுத்த தெற்குவெள்ளுர் அழகு நாச்சியம்மன் கோவிலில் கடந்த மாதம் 17 ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. ஒவ்வொரு நாளும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனையொட்டி நாள்தோறும் இரவு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடைபெற்றது. நேற்று காலை அலங்கரிக்கப்பட்ட தேரை பக்தர்கள் அங்குள்ள வீதிகள் வழியாக தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகள் முன் கோலமிட்டு தேரை வரவேற்றனர்.
நேற்று மாலை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்கள் பொங்கல் மற்றும், மாவிளக்கு வைத்து வழிபாடு நடத்தினர்.
தேர்திருவிழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.